பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளர் முகென் ராவ் கதாநாயகனாக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
முகென் ராவ், அனுகீர்த்தி வாஸ் நடிப்பில் அஞ்சனா அலிகான் இயக்கும் வெற்றி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
அஞ்சனா இதற்கு முன்பு வெப்பம் படத்தை இயக்கியுள்ளார். வெற்றி படத்துக்குப் பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.
கதாநாயகி அனு கீர்த்தி வாஸ், 2018-ல் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். பிறகு மிஸ் வேர்ல்ட் 2018 போட்டியிலும் கலந்துகொண்டார்.
அடுத்த வாரம் முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.