முகப்பு
செய்திகள்

பெப்சி திரைப்படத் தொழிலாளர்களுக்கு 100 அரிசி மூட்டைகளை அளித்த நடிகர் சூரி

வருமானம் இல்லாமல் அவதிப்படும் பெப்சி அமைப்பு திரைப்படத் தொழிலாளர்களுக்கு 25 கிலோ கொண்ட 100 அரிசி மூட்டைகளை

Updated On : 11 ஏப்ரல், 2020 at 11:38 AM
பகிர்:

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 7,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சி சங்க தொழிலாளா்கள் பிரச்னையைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவா்களுக்கு உதவ நடிகா்கள் முன்வர வேண்டுமென அந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பெப்சி அமைப்புக்குப் பல்வேறு நடிகர்களும் உதவி செய்தார்கள். ஆனாலும் இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என செல்வமணி மீண்டும் உதவி கோரியுள்ளார்.

வருமானம் இல்லாமல் அவதிப்படும் பெப்சி அமைப்பு திரைப்படத் தொழிலாளர்களுக்கு 25 கிலோ கொண்ட 100 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார் நகைச்சுவை நடிகர் சூரி. தவிரவும் துணை நடிகர்கள் சங்கத்துக்கு 20 அரிசு மூட்டைகளையும் வழங்கியுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.