செய்திகள்

அருகில் வந்து செல்பி எடுக்க முயன்ற ரசிகர்கள்: கண்டித்த அஜித்!

தன் அருகில் வந்து செல்பி எடுக்க முயன்ற ரசிகரை எச்சரிக்கும் விதமாக அவருடைய செல்போனை...

DIN

தன் அருகில் வந்து செல்பி எடுக்க முயன்ற ரசிகரை எச்சரிக்கும் விதமாக அவருடைய செல்போனை  வாங்கி வைத்துக்கொண்டார் நடிகர் அஜித். 

தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37 ஆயிரம் இடங்களில் உள்ள 88,937 வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இன்று காலை முதல் திரையுலகப் பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் அஜித், தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்து வாக்களித்தார். அப்போது அஜித்தை அருகில் வந்து பார்க்கவும் அவரிடம் பேசவும் ரசிகர்கள் மிகவும் ஆர்வப்பட்டார்கள். முகக்கவசம் அணியாத ஒரு ரசிகர் அஜித்தின் அருகில் வந்து செல்பி எடுக்க முயன்றார். இதில் அதிருப்தியடைந்த அஜித், அந்த ரசிகரின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டார். பிறகு அஜித்தைச் சுற்றி நின்ற ரசிகர்களை காவலர்கள் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த ரசிகர்களை அஜித்தும் கண்டித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

SCROLL FOR NEXT