முகப்பு
செய்திகள்

கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் ஃபஹத் ஃபாசில்

கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:57 PM
பகிர்:

கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில்.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி என்கிற படத்தை இயக்கி அதை சூப்பர் ஹிட்டாக்கியதால் அவருக்குத் தமிழ்த் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி அதிலும் வெற்றியைப் பெற்றார். 

அடுத்ததாக, கமல் நடிக்கும் படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிக்கும் கமலின் 232-வது படத்தை எழுதி இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ். இசை - அனிருத். கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு விக்ரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் வில்லனாக நடிப்பவர் யார் என பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் விக்ரம் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார் பிரபல மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில். இதற்கு முன்பு வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய தமிழ்ப் படங்களில் அவர் நடித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →