செய்திகள்

த்ரிஷ்யம் 2 ரீமேக்கை இயக்கும் பி. வாசு!

இளையராஜா இசையமைத்திருந்தார்... 

DIN

மலையாளப் படமான த்ரிஷ்யம் 2, கன்னடத்தில் ரீமேக் ஆகவுள்ளது.

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013-ல் வெளியான மலையாளப் படம் - த்ரிஷ்யம்.

கேரளாவில் மகத்தான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்கிற பெயரில் வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சீனம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழைத் தவிர இதர மொழிகளில் வெளியான ரீமேக்கை வேறு இயக்குநர்கள் இயக்கினார்கள். 
 
ரூ. 50 கோடி வசூலைப் பெற்ற முதல் மலையாளப் படம் என்கிற பெருமை த்ரிஷ்யம் படத்துக்கு உண்டு. இதனால் இதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 மலையாளப் படம் உருவானது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷ்யம் 2 படம், பிப்ரவரி 19 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு அளித்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.

இந்நிலையில் முதல் பாகத்தைப் போலவே த்ரிஷ்யம் 2 படமும் கன்னடத்தில் ரீமேக் ஆகவுள்ளது. 

த்ரிஷ்யா 2 எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர், பிரபு, ஆஷா சரத் போன்றோர் நடிக்கிறார்கள். பி. வாசு இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

2014-ல் த்ரிஷ்யம் படத்தின் முதல் பாகத்தின் ரீமேக்கை த்ரிஷ்யா என்கிற பெயரில் கன்னடத்தில் இயக்கினார் பி. வாசு. அந்தப் படத்திலும் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் போன்றோர் நடித்திருந்தார்கள். இளையராஜா இசையமைத்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

2-ஆவது சிம்பொனியை எழுதி முடித்த இளையராஜா!

இந்தியா - அமெரிக்கா வணிக ஒப்பந்த கூட்டறிக்கை: இந்த வாரம் வெளியாகும் எனத் தகவல்!

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

சாரேகாமா இந்தியா லாபம் 17.8% சரிவு!

SCROLL FOR NEXT