செய்திகள்

யாரும் பயப்பட வேண்டாம்: நடிகர் செந்தில் விடியோவில் தகவல்

எனக்கு அடுத்த பரிசோதனையில் கரோனா இல்லை என்பது உறுதியானால்...

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் செந்தில், தன்னுடைய உடல்நிலை குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மூத்த திரைப்பட நடிகரான செந்தில், சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை பற்றி தன் மூத்த மகனுடன் இணைந்து விடியோ வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் செந்தில் கூறியதாவது:

எனக்கு கரோனா வந்தது உண்மை தான். யாரும் பயப்பட வேண்டாம். நான் நன்றாக உள்ளேன். கரோனா வந்தால் யாரும் பயப்படத் தேவையில்லை. பரிசோதனை செய்துகொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மருத்துவர்கள் சொன்ன மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுங்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் தான் எனக்குப் பெரிய அளவு பாதிப்பு இல்லை. அதேபோல நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது. எனக்கு அடுத்த பரிசோதனையில் கரோனா இல்லை என்பது உறுதியானால் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் எனச் சொல்லியிருக்கிறார்கள். பயப்படத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வகுப்புவாதம், வெறுப்பு அரசியலுக்கு எதிராக ராகுல்: சசி தரூர்

தமிழக அரசின் விருது வென்ற துஷாரா விஜயன் கூறியதென்ன?

நாட்டின் மிகச் சிறிய பட்ஜெட் பற்றி தெரியுமா!

மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்

துயர் நீக்கிய தலம்!

SCROLL FOR NEXT