முகப்பு
செய்திகள்

நடிகர் விவேக் விரைவில் குணமடைய ரஜினிகாந்த் வாழ்த்து

மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் விவேக் விரைவில் குணமடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Updated On : 16 ஏப்ரல், 2021 at 9:50 PM
நடிகர் விவேக் விரைவில் குணமடைய ரஜினிகாந்த் வாழ்த்து
பகிர்:

மாரடைப்பு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகர் விவேக் விரைவில் குணமடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர் நலம்பெற பல்வேறு திரைத்துறையினரும், அவரது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சுட்டுரைப் பதிவில், “நண்பர் விவேக் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.