சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் - ராதே.
சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா போன்றோர் நடித்துள்ளார்கள்.
10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் தபாங் 3 வெளியானது. அடுத்ததாக ராதே படத்தில் இருவரும் 3-வது முறையாக இணைந்துள்ளார்கள்.
ராதே படம் கடந்த வருடம் மே மாதம் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
மே 13 அன்று திரையரங்கில் வெளியாகும் ராதே படம் அதே நாளில் ஜீ பிளெக்ஸ் ஓடிடியிலும் வெளியாகிறது. இதற்கென தனியாகக் கட்டணம் செலுத்தி பார்க்கலாம்.
ராதே படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
ராதே படத்தைத் திரையரங்கில் வெளியான அதே நாளில் ஓடிடியில் காண்பது எப்படி?
ரூ. 299 செலுத்தி ஜீபிளெக்ஸ் தளத்தில் காணலாம். இந்தக் கட்டணத்தைச் செலுத்தி ராதே படத்தை டிடிஎச் (DTH) வழியாகவும் காண முடியும்.
ஜீ5 பிரீமியம் வருடாந்திர சந்தா வைத்திருப்பவர்கள் ரூ. 299 கட்டணத்தைத் தனியாகச் செலுத்தாமலேயே ராதே படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
ஜீ5 பிரீமியர் வருடாந்திர சந்தாவுக்குக் கட்டணம் செலுத்தினால் ஒரு வருடம் ஜீ5 ஓடிடியில் வெளியாகும் படங்கள் நிகழ்ச்சிகளையும் மட்டுமல்லாமல் ராதே படத்தையும் பார்க்கலாம்.
இத்தகவல்கள் லெட்ஸ்ஓடிடி ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.