சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதுகளுடன் ஜாவோ (நோமட்லேண்ட்) 
செய்திகள்

ஆஸ்கர் விருது விழா: படங்கள்

சிறந்த இயக்குநருக்கான விருதை ஜாவோ (நோமட்லேண்ட்), சிறந்த நடிகருக்கான விருதை ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்)...

DIN

சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது. 

93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்ரவரி 28 அன்று நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உலகம் முழுக்க கரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவுவதால் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2021 பிப்ரவரி 28-க்குப் பதிலாக ஏப்ரல் 25 அன்று ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. 

ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேரடியாகவும் இணையம் வழியாகவும் நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள யூனியன் ஸ்டேஷன், டால்பி திரையரங்கம் ஆகிய இடங்களில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்களும் விருந்தினர்களும் நியூ யார்க் மற்றும் லண்டனில் அமைக்கப்பட்ட கூடுதல் விழா அரங்கிலும் கலந்துகொண்டார்கள். 

சிறந்த படத்துக்கான விருதை நோமட்லேண்ட் பெற்றுள்ளது. சிறந்த இயக்குநருக்கான விருதை ஜாவோ (நோமட்லேண்ட்), சிறந்த நடிகருக்கான விருதை ஆந்தனி ஹாப்கின்ஸ் (தி ஃபாதர்), சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மெக்டர்மாண்ட்  (நோமட்லேண்ட்) சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை எரிக் (மான்க்) ஆகியோர் பெற்றுள்ளார்கள். சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதை டென்மார்க்கின் அனதர் ரவுண்ட் படம் பெற்றுள்ளது. சிறந்த அனிமேஷன் படமாக சோல் தேர்வாகியுள்ளது. சிறந்த ஆவணப் படத்துக்கான விருதை மை ஆக்டோபஸ் டீச்சர் வென்றுள்ளது. 

சிறந்த ஆவணப்படத்துக்கான விருதுடன் பிப்பா எர்லிச், ஜேம்ஸ் ரீட்
சிறந்த துணை நடிகைக்கான விருதுடன் யுஹ் - ஜங் யோன்
சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதுடன் தாமஸ் விண்டர்பர்க்
சிறந்த படத்துக்கான விருது வென்ற நோமட்லேண்ட் படக்குழுவினர்
சிறந்த அனிமேஷன் விருது (குறும்படம்) பெற்ற படக்குழுவினர்
சிறந்த துணை நடிகருக்கான விருது பெற்ற டேனியல்
சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதுகளுடன் ஜாவோ (நோமட்லேண்ட்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் தி காட்ஃபாதர் - மூன்று பாகங்கள்!

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

பாலியல் குற்றச்சாட்டில் எம்எல்ஏ இடைநீக்கம்: ‘பிற கட்சிகளுக்கு காங். முன்னுதாரணம்!' -வி.டி.சதீஷன்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

SCROLL FOR NEXT