செய்திகள்

''ஒருவேளை நான் மது அருந்தியிருந்தால்....'' - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த யாஷிகா

DIN

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக பரவும் வதந்தி குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் விளக்கமளித்துள்ளார். 

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக பரவும் வதந்தி குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் விளக்கமளித்துள்ளார். 

நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த மாதம் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் தனது தோழியை இழந்தது குறித்து வருத்தம் தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான். நாங்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக வதந்திகள் பரவுகின்றன. ஆனால் காவல்துறையினர் நாங்கள் மது அருந்தவில்லை என்று உறுதி செய்துள்ளனர்.

நான் அப்படி மது அருந்தி விட்டு வாகன் ஓட்டி, அதனால் விபத்து ஏற்பட்டிருந்தால் நான் தற்போது சிறையில் இருந்திருப்பேன். மருத்துவமனையில் அல்ல. பொய்யான நபர்கள் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். மருத்துவமனை அறிக்கையும் நான் மது அருந்தவில்லை என்பதை உறுதி செய்துள்ளது. 

கடந்த 2 வருடங்களுக்கு முன் எனது பெயருக்கு கலங்கம் விளைவித்ததற்காக வழக்கு தொடர்ந்திருந்தேன். ஆனாலும் இவர்கள் என் மீது பொய்யான அவதூறு பரப்ப எந்த எல்லைக்கும் செல்வார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்துள்ள நடிகை வனிதா, ''இது எல்லோருக்கும் நடக்கும். அதனால் தான் நாம் இதனை விபத்து என்கிறோம். பிறப்பும், இறப்பும் முன்னரே தீர்மானிக்கப்பட்டது. அதனையும் யாராலும் மாற்ற முடியாது.

உனது கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒன்றுக்காக குற்ற உணர்ச்சிக்கு ஆளாவதை நிறுத்து. மற்றவர்கள் நினைப்பது குறித்து நீ கவலைப்படத் தேவையில்லை. இந்தக் கொடூர விபத்தில் இருந்து நீ பிழைத்திருப்பதன் பின்னால் ஒரு காரணம் இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தனது உடல் நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், இடுப்பு எழும்பில் பல இடங்களில் முறிவு ஏற்பட்டுள்ளன. மேலும் எனது வலது கால் முறிந்துள்ளது. இதனால் என்னால் 5 மாதங்களுக்கு நிற்கவோ, நடக்கவோ முடியாது.  நான் படுத்தப்படுக்கையாக இருக்கிறேன். இயற்கை உபாதைகளைக் கூட படுக்கையில் இருந்தபடியே கழிக்க வேண்டியிருக்கிறது.

என்னால் எந்தப் பக்கமும் திரும்பி படுக்க முடியவில்லை. எனது பின்பக்கம் முழுமையாக காயமடைந்துள்ளது. நல்லவேளையாக என் முகத்தில் எந்த அடியும் படவில்லை. இது எனக்கு இன்னொரு பிறப்பு போன்றது. உடல் மற்றும் மனதளவில் நான் காயப்பட்டிருக்கிறேன். கடவுள் என்னை தண்டித்து விட்டார். ஆனால் அது நான் இழந்ததற்கு ஈடாகாது'' என்று தெரிவித்துள்ளார். அவருக்கு சம்யுக்தா, சனம் ஷெட்டி உள்ளிட்டோர் ஆறுதல் கூறி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT