செய்திகள்

திடீர் திருமணம் ?: திருமண விடியோவை பகிர்ந்த 'கண்ணான கண்ணே' நடிகை

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே தொடரில் நடிக்கும் சஹானா, தனது திருமண விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

DIN

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே தொடரில் நடிக்கும் சஹானா, தனது திருமண விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பகல் நிலவு, அழகு ஆகிய தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர் நடிகை சஹானா குறிப்பாக அழகு சீரியலில் நடிகை ரேவதியின் மகளாக இவர் நடித்த வேடம் ரசிகர்களிடம் மிக பிரபலம். இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே, தாலாட்டு ஆகிய தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். 

'அழகு' தொடருக்குப் பிறகு 'தாலாட்டு' தொடரிலும் ஸ்ருதி ராஜூடன்  இணைந்து கலக்கிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவருக்கும் அபிஷேக் என்ற மருத்துவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண விடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இந்த விடியோவில் திருமண சடங்குகள், வழக்கமாக திருமணத்துக்கு பிறகு மணமக்கள் பங்கேற்கும் விளையாட்டுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.  முடிந்த பிறகு அபிஷேக் சஹானாவிற்கு முத்தமிடுவது அழகான தருணமாக அமைந்துள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மணமக்களுக்கு தினமணி சார்பாக திருமண வாழ்த்துகள் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT