ஓடிடியில் வெளியாகும் 'டிக்கிலோனா' 
செய்திகள்

ஓடிடியில் வெளியாகும் 'டிக்கிலோனா'

சந்தானம் நடிப்பில் வெளியாக இருக்கும்  டிக்கிலோனா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட இருக்கிறார்கள். 

DIN

நீண்ட நாட்களாக திரைப்படங்களை  திரையரங்கில் வெளியிட காத்திருக்கும் பல தயாரிப்பாளர்களின் முயற்சிகள் கரோனாவால் முறியடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் தற்போது திரையரங்கம் திறக்க வாய்ப்பில்லை என்பதால் பல திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்த 'டிக்கிலோனா' திரைப்படம் பல மாதங்களாக வெளியீட்டிற்கு காத்திருந்தது. ஆனால் கரோனா தொற்றால் இப்படமும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தை பலூன் பட இயக்குநர் சினிஷ் தயாரித்திருக்கிறார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும்  அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அப்பல்லோவில் 6,000 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை

தொழிலதிபருடன் விடுதியில் அறை எடுத்து தங்கி நகை திருட்டு: தோழி கைது!

சென்னை கம்பன் கழக பொன்விழா நிறைவு: நாளை முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

சென்னை-திருச்சி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

SCROLL FOR NEXT