படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு நேர்ந்த விபத்து : இப்பொழுது எப்படி இருக்கிறார் ?
படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து இயக்குநர் சேரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
செய்திகள்படப்பிடிப்பில் இயக்குநர் சேரனுக்கு நேர்ந்த விபத்து : இப்பொழுது எப்படி இருக்கிறார் ?
படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து இயக்குநர் சேரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நேர்ந்த விபத்து குறித்து இயக்குநர் சேரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயக்குநரும் நடிகருமான சேரன் யதார்த்த படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். இவர் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சர்ச்சைகளுக்கு ஆளானார். இருப்பினும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தது.
இதையும் படிக்க | வரிசையாக ஓடிடியில் வெளியாகும் நடிகர் சூர்யாவின் 4 படங்கள்
இதனையடுத்து அவர் தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் தற்போது ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்ததாக கூறப்பட்டது. அவர் உயரத்தில் இருந்து கீழே விழும் விடியோ காட்சிகள் இணையத்தில் பரவலாகி வருகிறது.
இதையும் படிக்க | நடிகர் தனுஷுக்கு வரியை செலுத்த 48 மணி நேரம் கெடு: நீதிமன்றம் அதிரடி
இந்த நிலையில் இயக்குநர் சேரன் தனது சுட்டுரைப் பக்கத்தில், ''நலம் விசாரிக்கும் நண்பர்களுக்கு வணக்கம். நான் லமாக இருக்கிறேன். பயம் ஒன்றும் இல்லை. உங்களின் அன்பால், கடவுள் அருளால் காப்பாற்றப்பட்டேன் என்பதே சரி. அனைவரும் அனைத்து வேலைகளிலும் கவனமாக இருக்கவும், நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.