செய்திகள்

விக்ரம் - துருவ் இணைந்து நடிக்கும் படம்: முக்கிய தகவலை பகிர்ந்த பிரபல நடிகர்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் படத்தைப் பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. 

DIN


விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில  'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும்  இந்தப் படத்தில் இருந்து 'தும்பி துள்ளல்' என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக 'கேஜிஎஃப்' புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி  நடிக்க, இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனையடுத்து விக்ரம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது மகன் துருவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 'சேதுபதி', 'றெக்க' படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனம் ஈர்த்த, மாஸ்டர் ராகவன் இந்தப் படத்தில் நடிக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்திக் சுப்புராஜூடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

அதில் ''இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் படங்களுக்கு நான் மிகப் பெரிய ரசிகரன். அவர் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் 60வது படத்தில் நடிப்பது மகிழ்ச்சி.  என்னுடைய காட்சிகள் காஞ்சிபுரத்தில் படமாக்கப்பட்டது. இவை அனைத்தும் நிறைவடைந்தன'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய மேஜைப் பந்து போட்டி: கொங்கு கல்வி நிலையம் மாணவிக்கு தங்கப் பதக்கம்!

தீயசக்தி, தூய சக்தியைப் பற்றிக் கவலை இல்லை; எங்களிடமே மக்கள் சக்தி: எஸ். ரகுபதி!

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இருவா் கைது

கந்தா்வகோட்டை வட்டாரப் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT