முகப்பு
செய்திகள்

கமல்ஹாசன் - இயக்குநர் பா.ரஞ்சித் திடீர் சந்திப்பு - என்ன காரணம் ?

'சார்பட்டா பரம்பரை' படம் பார்த்துவிட்டு இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

'சார்பட்டா பரம்பரை' படம் பார்த்துவிட்டு இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். 

கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.  இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் 'சார்பட்டா பரம்பரை' படம் பார்த்துவிட்டு  இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார். இந்த நிகழ்வு படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. 

1970களில் வட சென்னையில் நடக்கும் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.  இந்தப் படம் குறித்து பல்வேறு பிரபலங்கள் இயக்குநர் பா.ரஞ்சித்தை பாராட்டி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.