செய்திகள்

மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் 'சார்பட்டா பரம்பரை' நடிகர்

'சார்பட்டா பரம்பரை' படத்தில் ராமன் என்ற வேடத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், மிஷ்கினின் 'பிசாசு 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

DIN

'சார்பட்டா பரம்பரை' படத்தில் ராமன் என்ற வேடத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப், மிஷ்கினின் 'பிசாசு 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

பா.ரஞ்சித் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், டான்சிங் ரோஸ் வேடத்தில் நடித்த சபீர், ராமன் என்ற வேடத்தில் நடித்திருந்த சந்தோஷ் பிரதாப் என அனைவரும் தங்களது இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தனர். 

இந்த நிலையில் மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகி வரும் 'பிசாசு 2' படத்தில் சந்தோஷ் பிரதாப் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சந்தோஷ் பிரதாப், இந்தப் படத்தில் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் 'பிசாசு 2' படத்தில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் பூர்ணா, சைக்கோ படத்தில் சைக்கோவாக கவனம் ஈர்த்த ராஜ்குமார் பிச்சுமணி, இந்தப் படத்துக்கு இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். முதன் முறையாக மிஷ்கினுடன் கார்த்திக் ராஜா இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT