முகப்பு
செய்திகள்

'ரோஜா' தொடரின் கதாநாயகனுக்கு இவருடன் திருமணம் ? - இணையத்தில் பரவும் புகைப்படம்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடரான ரோஜாவில் கதாநாயகனாக நடிக்கும் ஷிபுவிற்கு திருமணம் முடிந்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடரான ரோஜாவில் கதாநாயகனாக நடிக்கும் ஷிபுவிற்கு திருமணம் முடிந்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவுகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். குறிப்பாக இந்தத் தொடரில் கதாநாயகனாக நடிக்கும் ஷிபுவிற்கு கதாநாயகியாக நடிக்கும் பிரியங்காவிற்கும் சமூக வலைதளங்களில் தனி பக்கங்களை ரசிகர்கள் உருவாக்கியுள்ளார்கள். இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

2 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும், இந்த தொடர் தமிழ் நாட்டில் அதிகம் பேர் பார்க்கும் சின்னத்திரை தொடர்களில் முன்னணியில் இருக்கிறது. அர்ஜூன் என்ற வேடத்தில் நடிக்கும் ஷிபு தற்போது கன்னடத்தில் சகுந்தலா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறாராம். 

ஷிபுவின் புகைப்படம் மற்றும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை இணைத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ரசிகர் ஒருவர், இருவரின் திருமணத்துக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இந்த தகவல் குறித்து மறுப்பு தெரிவிக்காதது தகவல் உண்மையாக இருக்கலாம் என்று எண்ணத்தை ஏற்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஷிபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் குறித்து தகவல் எதுவும் பகிரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
முழு கட்டுரையைப் படிக்க →