முகப்பு
செய்திகள்

'இது என்னோட பீஸ்ட்' - ஷிவானி பகிர்ந்த புகைப்படம்: வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்

நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய காருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இது என்னுடைய பீஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய காருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, இது என்னுடைய பீஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' தொடர் மூலம் அறிமுகமானார் ஷிவானி. ஜி தமிழில் 'ரெட்டை ரோஜா' தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

 நடிகை ஷிவானி, விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். இதனையடுத்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

மேலும், ஷிவானி வெளியிடும் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இவர் அடுத்து நடிக்கும் பட அறிவுப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இந்த நிலையில் நடிகை ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது புதிய பிஎம்டபுள்யூ காருடன் இருக்கும் புகைப்படம் பகிர்ந்து, 'இது என்னுடைய பீஸ்ட்' என்று குறிப்பிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →