படம் - www.instagram.com/urf7i/ 
செய்திகள்

நான் மீண்டும் உள்ளே நுழைந்தால்... பிக் பாஸிலிருந்து வெளியேறிய நடிகை சீற்றம்

எல்லோரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். நானும் தான்.

DIN

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகை உர்ஃபி வெளியேற்றப்பட்டுள்ளார்.  

இந்த வருடம் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓடிடியில் நேரடியாக ஒளிபரப்பாகி வருகிறது. வூட் செலக்ட் செயலியில் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கப்பட்டுள்ளது. 13 பேர் போட்டியாளர்களாக பிக் பாஸ் இல்லத்துக்குள் நுழைந்துள்ளார்கள். பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் 15 நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முன்பு, ஆறு வாரங்களுக்கு வூட் செலக்ட் ஓடிடியில் வெளியாகவுள்ளது. 

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வரும் நடிகை உர்ஃபி ஜாவத், முதல் போட்டியாளராக பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

முதல் நபராக நான் வெளியேற்றப்பட்டதில் வேதனையில் உள்ளேன். எனக்கு இது நடந்திருக்கக் கூடாது. இது எப்படி நடந்தது என்று என் வீட்டிலும் வெளியிலும் என்னிடம் கேட்கிறார்கள். எல்லோரும் அதிர்ச்சியில் உள்ளார்கள். நானும் தான். ஏனென்று தெரியவில்லை. வைல்ட் கார்ட் வழியாக பிக் பாஸ் இல்லத்துக்குள் மீண்டும் நான் நுழைந்தால் அனைவரும் காலி தான். அது நடக்கவேண்டும் என விருப்பப்படுகிறேன். நான் மீண்டும் உள்ளே வரக்கூடாது என அனைவரும் விரும்புவார்கள் என எண்ணுகிறேன். ஏனெனில் எல்லோரையும் நான் காலி செய்துவிடுவேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

திராவிட இயக்கம் உள்ள வரை ஹனிபாவின் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்: துணை முதல்வர் உதயநிதி

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

SCROLL FOR NEXT