செய்திகள்

நடிகை ஷெரின் பகிர்ந்த விடியோ - 'எப்படி நடந்தது என்றே தெரியவில்லை'

நடிகை ஷெரின் தனக்கு கரோனா தொற்று உறுதியிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ மூலம் அறிவித்துள்ளார். 

DIN

நடிகை ஷெரின் தனக்கு கரோனா தொற்று உறுதியிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ மூலம் அறிவித்துள்ளார். 

'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரீன். தொடர்ந்து 'ஸ்டூடன்ட் நம்பர் 1', 'விசில்' 'உற்சாகம்' போன்ற படங்களில் நடித்தார். 

கடைசியாக 2015 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் இணைந்து நடித்த 'நண்பேன்டா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வவங்கிய பிகக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு 3வது இடம் கிடைத்தது. 

இதனையடுத்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. எனக்கு எப்படி பரவியது என்று தெரியவில்லை.

எனக்கு அறிகுறிகள் இல்லாததால், பரவும் வாய்ப்பு குறைவு என மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் கடந்த 4 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT