செய்திகள்

அட்லி - ஷாருக்கான் படம்: நயன்தாராவுடன் இணைந்த மற்றொரு கதாநாயகி

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கும் நிலையில், புதிதாக சான்யா மல்ஹோத்ராவும் இணைந்துள்ளார். 

DIN


அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கும் நிலையில், புதிதாக சான்யா மல்ஹோத்ராவும் இணைந்துள்ளார். 

பிகில் படத்துக்குப் பிறகு இயக்குநர் ஷாரூக்கான் நடிப்பில் ஹிந்திப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். 

இந்த நிலையில் இந்தப் படத்தில் 'தங்கல்' புகழ் சான்யா மல்ஹோத்ரா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஷாரூக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க அட்லி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. 

முதலில் இந்தப் படத்தின் டீஸர் படமாக்கப்பட்டு விட்டதாகவும், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து ஷாரூக்கான் ரசிகர்கள் டீசரை எதிர் நோக்கி காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தப் படத்தை 180 நாட்கள் படமாக்க அட்லி திட்டமிட்டுள்ளாராம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

SCROLL FOR NEXT