செய்திகள்

கருணாஸ் மகனுக்காக களமிறங்கும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன்

கருணாஸின் மகன் கென் இசையமைத்துள்ள பாடலை நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுகின்றனர். 

DIN

கருணாஸின் மகன் கென் இசையமைத்துள்ள பாடலை நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுகின்றனர். 

நடிகர் , பாடகர், இசையமைப்பாளர் என பண்முகம் கொண்டவர் நடிகர் கருணாஸ். இவரது மகன் கென், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் கென் நடிப்பிற்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இந்த நிலையில்  கென்  மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இணைந்து வாடா ராசா என்ற பாடலுக்கு இசையமைத்துள்ளனர்.  இந்தப் பாடலில் கருணாஸ் மனைவி கிரேஸ் பாடி நடித்துள்ளார். அவருடன் இணைந்து இந்தப் பாடலில் சித்தி 2 புகழ் ப்ரீத்தி சர்மாவும் தோன்றவுள்ளார். இந்தப் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. 

இந்தப்  பாடலை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்திலும், இயக்குநர் வெற்றிமாறன் தனது முகநூல் பக்கத்திலும் வெளியிடவுள்ளனர். இந்தப் பாடலை வெங்கி இயக்க, நடன இயக்குநர் சாண்டி இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.  இந்தப் பாடலின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனிம வளம் ஏற்றிச்சென்ற லாரி ஓட்டுநர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

ஒரு ரூபாய் நாணய மதிப்பை விட தயாரிப்பு செலவு அதிகமா? ரூ.2000 நோட்டுக்கு ரூ.4 செலவானதா?

வாரத்தில் 5 நாள்கள் வேலையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

சிறை நாயகன் நடிக்கும் ராவடி!

SCROLL FOR NEXT