செய்திகள்

சினிமா கதாநாயகியாகும் விஜய் டிவி நடிகை: வெளியான புகைப்படம்

பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி, கன்னடப் படமொன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 

DIN

பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி, கன்னடப் படமொன்றில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். 

சிவகார்த்திகேயன், மிர்ச்சி செந்தில், கவின், ரியோ, வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் என சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்றவர்கள் பட்டியல் மிகப்பெரியது. அதில் சிவகார்த்திகேயன் போன்ற ஒரு சிலரே வெற்றிப் பெற்றுள்ளனர். 

அந்த வகையில் விஜய் டிவியில் இருந்து மற்றொரு நடிகை சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார். சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட தொடர்களில் நடித்த ரச்சிதா மகாலட்சுமி கன்னடப் படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். 

இந்தப் படத்துக்கு 'ரங்கநாயகா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்த  ரச்சிதா, தன்னை வாழ்த்துமாறு ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.  இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இருந்து நடிகை ரச்சிதா விலகுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் இதுகுறித்து அவர் எதுவும் கூறவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

SCROLL FOR NEXT