செய்திகள்

லவ் ஸ்டோரியுடன் சந்திக்க வரும் சாய் பல்லவி!

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் லவ் ஸ்டோரி செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

DIN


நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் லவ் ஸ்டோரி செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஃபிடா, ஹேப்பி டேஸ் போன்ற படங்களை இயக்கிய சேகர் கம்முலா தற்போது நாக சைதன்யா, சாய் பல்லவியை வைத்து லவ் ஸ்டோரி படத்தை இயக்கியிருக்கிறார். சேகர் கம்முலாவும், சாய் பல்லவியும் 2017-இல் வெளியாகி ஹிட் அடித்த ஃபிடாவுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், பட வெளியீட்டுத் தேதியை குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர். இந்தப் படம் செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுபற்றி சாய் பல்லவி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:

"இறுதியாக!!! செப்டம்பர் 10-ம் தேதி அனைவரையும் சந்திக்கிறோம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் தம்பதி காயம்

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

சாலைகளை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்

தாமிரவருணியில் 2ஆவது நாளாக வெள்ளம்! மக்கள் குளிக்க கட்டுப்பாடு

கோயில் குளத்தில் கிராம உதவியாளா் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT