செய்திகள்

'அவன் - இவன்' பட வழக்கு: இயக்குநர் பாலாவை விடுவித்த நீதிமன்றம்

அவன் - இவன் பட வழக்கில் இருந்து இயக்குநர் பாலா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.   

DIN

'அவன் - இவன்' பட வழக்கில் இருந்து இயக்குநர் பாலா நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.  

இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் ஆர்யா - விஷால் நடித்து கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான படம் 'அவன் இவன்'. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். 

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், சொரிமுத்து அய்யனார் கோயில் பற்றியும் தவறாக சித்திரிக்கப்பட்டிருப்பதாக சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த சங்கராத்மஜன் என்பவரால் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஆர்யா தரப்பில் வருத்தம் தெரிவித்ததால், அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இயக்குநர் பாலா தரப்பு மீதான விசாரணை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திர நீதிமன்றத்தில நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இயக்குநர் பாலா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அப்போது மனுதாரார், பாலா மீதான தம் தரப்பு புகாரை முறையாக நிரூபணம் செய்யாததால் 'அவன் இவன்' பட வழக்கில் இருந்து இயக்குநர் பாலாவை விடுவித்து அம்பாசமுத்திரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

ஜிஎஸ்டி குறைப்பு வரவேற்கத்தக்கது; ஆனால், பிகார் தேர்தல் காரணமா? - காங்கிரஸ் கேள்வி

விஜய் வியூகம் வெற்றி பெறுமா? - அா்ஜுன் சம்பத்

மீட்புப் பணி போட்டி: முதலிடம் பெற்ற ஊா்க்காவல் படையினருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT