செய்திகள்

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கரோனாவால் பாதிக்கப்பட்ட நதியா

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் நடிகை நதியாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

DIN

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் நடிகை நதியாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிகை நதியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் நடிகை நதியாவுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் நடிகை நதியா இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டுள்ளார். 

மேலும் நதியாவின் அப்பா, அம்மா வீட்டில் வேலை செய்பவர் உள்ளிட்டோருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதனையடுத்து நதியா உட்பட 4 பேரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். நடிகை நதியா விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT