செய்திகள்

அயன் படத்தில் சூர்யா அணிந்திருப்பது நடிகை ஸ்ரேயாவின் உடையா ?: புகைப்படம் வைரல்

நடிகை ஸ்ரேயா 'சிவாஜி' படத்தில் அணிந்த உடையைப் போன்று, சூர்யா உடை அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

நடிகை ஸ்ரேயா 'சிவாஜி' படத்தில் அணிந்த உடையைப் போன்று, சூர்யா உடை அணிந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா கதநாயகனாக நடித்து வெளியான படம் 'அயன்'. இந்தப் படத்தில் 'பளபளக்குற பகலா நீ' என்ற பாடலில் ஒரு காட்சியில் நடிகர் சூர்யா பெண் வேடமிட்டு தோன்றுவார். 

புகைப்படங்கள்: 

அப்போது சூர்யா அணிந்திருக்கும் உடையானது, 'சிவாஜி' படத்தில் ஒரு கூடை சன் லைட் பாடலில் ஸ்ரேயா அணிந்திருக்கும் உடையைப் போன்று உள்ளது. 'அயன்' படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த், சிவாஜி படங்களுக்கு ஒளிப்பதிவாளர் என்பதும், 'சிவாஜி' மற்றும் 'அயன்' ஆகிய இரு படங்களையும் தயாரித்தது ஏவிஎம் நிறுவனம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

பொதுவாக  படத் தயாரிப்பு நிறுவனங்கள் ஒரு படத்தில் நடிகர்கள் பயன்படுத்திய உடை, ஆபரணங்கள் ஆகியவற்றைப் பத்திரப்படுத்தி, தேவைப்படும்பொழுது பிற படங்களுக்கு பயன்படுத்துவது வழக்கம். அந்த வகையில் நடிகர் சூர்யா பெண் வேடமிட்டு நடிக்கும் காட்சிக்கு பெண் உடை தேவைப்பட்டதன் காரணமாக, சிவாஜியில் நடிகை ஸ்ரேயா பயன்படுத்திய உடையைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிர் உலகக்கோப்பை: வங்கதேசம் போராடி தோல்வி!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் ஸ்மிருதி மந்தனா!

ஃபேப்டெக் டெக்னாலஜி பங்குகள் 4.55% சரிவுடன் நிறைவு!

ராதையின் மோகனம்... அனுபமா!

ஹெச்.டி. தேவெகெளடா மருத்துவமனையில் அனுமதி

SCROLL FOR NEXT