செய்திகள்

யாரென்று தெரிகிறதா ? - வைரலாகும் புகைப்படம்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்

மாடர்ன் உடையில் இருக்கும் நடிகை குஷ்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

மாடர்ன் உடையில் இருக்கும் நடிகை குஷ்புவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

'தர்மத்தின் தலைவன்', 'பாண்டியன்', 'மன்னன்', 'அண்ணாமலை' படங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த்துடன் 'அண்ணாத்த' படத்தில் நடிகை குஷ்பு இணைந்துள்ளார். இந்தப் படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. 

பாஜக சார்பில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு, தற்போது நடிப்பின் மீது கவனம் செலுத்தத் துவங்கியிருக்கிறார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கோகுலத்தில் சீதை' தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில் சமீபத்தில் அவர் உடல் எடை குறைந்து முன்பை விட ஒல்லியாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அந்த வகையில் அவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்படியே 90களில் அவர் கதாநாயகியாக நடித்தபோது எப்படி இருந்தாரோ, அதே போன்று இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பென்னாகரம் வாரச்சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

அரசுப் பள்ளியில் பொங்கல் விழா

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் தொழிலாளி கைது

திட்டப் பணிகளில் குறைபாடு: திருச்சி மாநகராட்சியில் 2 ஒப்பந்ததாரா்களிடம் ரூ. 1.88 கோடி தொகை பிடித்தம்

இருசக்கர வாகனங்களில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்: எஸ்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT