தனது கல்லூரி கால காதலியின் நீச்சல் உடை புகைப்படத்தைப் பகிர்ந்து இயக்குநர் ராம் கோபால் வர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தெலுங்கு, ஹிந்தியில் ஏராளமான படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. ஒரு காலத்தில் ராம் கோபால் வர்மாவின் பெயர் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம்.
ஆனால் தற்போது விவகாரமான கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவியின் குடும்பத்தைப் பற்றி விமர்சனம் செய்து அவரது ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார்.
இந்த நிலையில் நீச்சல் உடையில் இருக்கும் தனது கல்லூரி கால காதலியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ''நீல நிற உடையில் இருப்பவர் சத்யா. இவர் எனது முதல் காதலி. நான் சித்தார்த்தா பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட காதல் அது. இப்பொது சத்யா சத்யா அமெரிக்காவில் மருத்துவராக இருக்கிறார்.
அந்த காலத்தில் மருத்துவக் கல்லூரியும், பொறியியல் கல்லூரியும் ஒரே காம்பவுண்டில் இருந்தன. அங்கே தான் சத்யா மீது எனது ஒரு தலை காதல் தோன்றியது. அவள் என்னை கண்டுகொள்ள மாட்டாள் என நினைத்தேன். ஏனெனில் அவளுடன் அழகான பணக்கார வீட்டுப் பையன் இருந்தான். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் என்னுடைய ரங்கீலா கதையை எழுதினேன்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து இன்னொருவர் அனுமதியில்லாமல் எப்படி அவரது நீச்சல் உடைப் புகைப்படத்தை பகிரலாம் என சமூகவலைதளவாசிகள் அவரைக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.