செய்திகள்

'சார்பட்டா பரம்பரை'யைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி

DIN

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த மாதம் அமேசான் பிரைமில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. 

பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் 22 ஆம் தேதி அமெசான் பிரைம் விடியோவில் வெளியான படம் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம். இந்தப் படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இதுகுறித்து நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ''சார்பட்டா பரம்பரை' படத்தின் தொலைக்காட்சி உரிமையைக் கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது.

என்னுடைய 'மதராசப்பட்டினம்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படங்களுக்குப் பிறகு எனது படம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.  உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி'' என்று தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து விரைவில் இந்தப் படம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  'சார்பட்டா பரம்பரை' படத்தில் திமுக தொடர்பான கருத்துக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT