செய்திகள்

பொன்னியின் செல்வன்: ''முடியாது இளவரசே'' - ஜெயம் ரவிக்கு வந்தியத்தேவன் கார்த்தி பதில்

பொன்னியின் செல்வன் குறித்த ஜெயம் ரவியின் பதிவுக்கு கார்த்தி வந்தியத்தேவனாக பதிலளித்துள்ளார். 

DIN

'பொன்னியின் செல்வன்' குறித்த ஜெயம் ரவியின் பதிவுக்கு கார்த்தி வந்தியத்தேவனாக பதிலளித்துள்ளார். 

'பொன்னியின் செல்வன்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மத்திய பிரதேசம் மாநிலம் ஓர்ச்சாவில் நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகர்கள் கார்த்தி, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்தப் படம் இரு பாகங்களாக உருவாகி வருகிறது. 

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி தனது சுட்டுரைப் பக்கத்தில், உங்கள் தலைமைப் பண்பை பார்ப்பது வாழ்நாள் அனுபவம். உங்களது நகைச்சுவை உணர்வு, என் மீது நீங்கள் காட்டிய அக்கறை, என் மீது நீங்கள் வைத்த நம்பிக்கை ஆகியவற்றிற்கு நன்றி சார்.  உங்களுடன் மீண்டும் பணி செய்யும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்" என இயக்குநர் மணிரத்னம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், ''ஒரு படம் அல்ல, இரண்டு படங்களிலும் என் சம்மந்தப்பபட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டன. என் அம்மாவின் ஆசிர்வாதத்துடன் புதிய ஆரம்பம். பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு பதிலளித்த நடிகர் கார்த்தி, ''இளவரசே நீங்கள் அதற்குள் விடைபெற்றுக்கொள்ள முடியாது. சோழ நாட்டிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. இன்னும் 6 நாட்களில் வடக்கில் வேலைகளை முடித்துவிட்டு தென் மண்டலம் வந்தடைவோம் - வந்தியத்தேவன்'' என்று தெரிவித்துள்ளார். 

'பொன்னியின் செல்வன்' படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ். பிரகாஷ் ராஜ், பிரபு, ரஹ்மான் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயர்கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

2025-ல் மட்டும் 600-க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள்! எங்கு தெரியுமா?

இந்தியாவுடனான நல்லுறவை டிரம்ப்பின் ஈகோ அழிக்கிறது? வரிவிதிப்புக்கு அமெரிக்க காங்கிரஸ் எதிர்ப்பு!

MKStalin vs Vijay | TKS Elangovan நேர்காணல் | MKStalin | vijayakanth | DMK | TVK

கலர் கலராக, ஸ்டைலாக முடி‌ இருந்தால் வேலை கிடைக்காது! மாணவர்களுக்கு அறிவுரை! | Tanjore

SCROLL FOR NEXT