செய்திகள்

'ராஜன் வகையறா' : வட சென்னையின் முன் கதை - நடிகரை உறுதி செய்த வெற்றிமாறன்

ராஜன் வகையறா என்ற பெயரில் வட சென்னையின் முன் கதையை இணையத் தொடராக வெற்றி மாறன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ராஜன் வகையறா என்ற பெயரில் வட சென்னையின் முன் கதையை இணையத் தொடராக வெற்றி மாறன் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படம் 'வட சென்னை'. இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் என வட சென்னை வெளியான போதே வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் தொடர்ந்து அசுரன், விடுதலை, வாடி வாசல் என அடுத்தடுத்த படங்களின் பணிகளில் இறங்கினார். 

மேலும் 'ராஜன் வகையறா' என அமீர் கதாப்பாத்திரத்தின் முன் கதையை இணையத் தொடராக எடுக்கவிருப்பதாக இயக்குநர் வெற்றி மாறன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் கருணாஸின் மகன் கென்னை நடிக்க வைக்க இயக்குநர் வெற்றி மாறன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  வாடி வாசல் படத்தின் பணிகளை முடித்த பிறகு அடுத்த ஆண்டு இந்த இணையத் தொடரின் பணிகளை வெற்றி மாறன் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தகவலை நடிகர் கருணாஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் வருடம் வெளியான அசுரன் படத்தில் தான் கென் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT