செய்திகள்

தன்னுடன் நடிப்பவரை மணக்கவிருக்கும் சன் டிவி நடிகை

சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற சந்திரா, மலையாளத் தொடரில் தன்னுடன் நடிக்கும் டோஸ் கிரிஸ்டி என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.

DIN


சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற சந்திரா, மலையாளத் தொடரில் தன்னுடன் நடிக்கும் டோஸ் கிரிஸ்டி என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள் நிகழ்ச்சியில் கங்கா என்ற வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சந்திரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை தொடரில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

விஜய் ஆண்டனியின் இசையில் உருவான என்னைத் தேடி என்ற  காதலிக்க நேரமில்லை பாடல் இன்றளவும் ரசிகர் மத்தியில் பிரபலம். சந்திரா தமிழ் மட்டுமல்லாது மலையாளத்திலும் பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். 

இவர் மலையாளத்தில் 'ஸ்வந்தம் சுஜாதா' என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்தத் தொடரில் தன்னுடன் நடிக்கும் டோஸ் கிரிஸ்டி என்பவருடன் சந்திராவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், டோஸ் கிரிஸ்டியின் கையைப் பிடித்தபடி இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அறிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தண்ணீரில் பிரசவம்...

ஒரு கோயில்: இரு நாடுகளின் சண்டை

பெண்கள் அழகாய் இருக்க..

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

SCROLL FOR NEXT