முகப்பு
செய்திகள்

நடிகர் அர்ஜுன் மீதான பாலியல் தொல்லை புகார் ஆதாரமற்றது : காவல் துறையினர் தகவல்

நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த பாலியல் தொல்லை புகார் ஆதாரமற்றது என காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

'நிபுணன்' என்ற படத்தில் நடித்தபோது நடிகர் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கடந்த 2018 ஆம் ஆண்டு  மீ2 இயக்கம் மூலம் புகார் தெரிவித்தார். 

இந்தப் புகாரை மறுத்த நடிகர் அர்ஜுன் ரூ.5 கோடி கேட்டு நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். மேலும் நடிகை ஸ்ருதி ஹரிஹரனும் நடிகர் அர்ஜுன் மீது காவல்துறையில் புகார் அளித்தார். 4 ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் இந்த வழக்கில் நடிகர் அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரானது எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாதது என பெங்களூரு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் நடிகர் அர்ஜுன் மீது தவறில்லை என அறிக்கை சமர்பிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments