செய்திகள்

சன் டிவி தொடரில் களமிறங்கும் பிக்பாஸ் நடிகை : ஆச்சரியத்தில் ரசிகர்கள்

பிரபல பிக்பாஸ் நடிகை அன்பே வா தொடரில் சிறப்பு வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக இருப்பவர் நடிகை சுஜா வருணி. தமிழில் இந்திரலோகத்தில் நா அழகப்பன், வைத்தீஸ்வரன், எங்கள் ஆசான், மிளகா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார். 

கிடாரி படத்தில் இவரது நடிப்பு கவனம் பெற்றது. மேலும் ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். 

சிவாஜியின் பேரனும், தயாரிப்பாளரும் நடிகருமான ராம்குமாரின் மகனுமான சிவகுமாரை காதல் திருமணம் செய்துகொண்டார் சுஜா வருணி. இருவருக்கும் அத்வைத் என்ற ஆண் குழந்தையுள்ளது.

இந்த நிலையில் சுஜா வருணி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா தொடரில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அவரது வேடம் அன்பே வா தொடரில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் செங்கோட்டையன்!

94 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை: உச்சத்தில் வெள்ளி!

திடீரென செயலிழந்த ரயில்வே கேட்! நல்வாய்ப்பாக தப்பிய வாகன ஓட்டிகள்!

களம்காவல் புதிய வெளியீட்டுத் தேதி!

தில்லியின் நிலை இதுதான்; காற்று மாசால் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை! - தாயின் ஆதங்கப் பதிவு

SCROLL FOR NEXT