செய்திகள்

கண்களுக்கு விருந்தாகும் பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' விடியோ பாடல்

பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தில் இருந்து திரையோடு தூரிகை என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

DIN

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் படங்களுக்கு இந்திய அளவில் வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில்  பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம். இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. இதில் தென்னிந்திய மொழிகளுக்கு மட்டும் ஐஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து ஏற்கனவே யுவன் பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து திரையோடு தூரிகை என்ற விடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை மதன் கார்கி எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். இந்தப் பாடல் கண்களைக் கவரும் வகையில் மிக அழகாக படமாக்கப்பட்ட காதல் பாடலாக அமைந்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

சஸ்பென்ஸ் உள்ளே... சைத்ரா ஆச்சார்!

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

SCROLL FOR NEXT