செய்திகள்

தனுஷின் 'கலாட்டா கல்யாணம்': ரஹ்மான் இசையில் வெளியான விடியோ பாடல்

தனுஷின் கலாட்டா கல்யாணம் படத்தில் இருந்து காதலை சொல்ல முடியாதா என்ற பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

DIN

ராஞ்சனா படத்துக்கு பிறகு இயக்குநர் ஆனந்த் எல் ராயுடன் தனுஷ் இணைந்திருக்கும் படம் அட்ராங்கி ரே. இந்தப் படம் தமிழில் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் உருவாகியுள்ளது. 

இந்தப் படத்தில் இருந்து சக்கா சக்களத்தி என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து காதலை சொல்ல முடியாதா என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

யாஷின் நிஷர், ஷாஷா திருப்பதி இணைந்து பாடியுள்ள இந்தப் பாடலை கபிலன் எழுதியுள்ளார். இந்தப் படம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகிறது. 

இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து அக்ஷய் குமார், சாரா அலிகான் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT