செய்திகள்

விஜய் டிவி தொடரில் ஹீரோயினாகும் பிக்பாஸ் கேப்ரியலா

விஜய் டிவி தொடரில் கேப்ரியலா கதாநாயகியாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் கேப்ரியலா. இந்த நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. மேலும், பிக்பாஸ் அளித்த
ரூ.5 லட்சம் பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். 

தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கினார். தனுஷ் - ஸ்ருதி ஹாசன் இணைந்து நடித்த 3 படத்தில் ஸ்ருதி
ஹாசனின் தங்கையாக நடித்தார். மேலும், 7 ஆம் வகுப்பு சி பிரிவு தொடரில் முக்கிய வடேத்தில் நடித்திருந்தார். 

இந்த நிலையில், அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ஈரமான ரோஜாவே இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறாராம்.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

மயிலாடுதுறை இளைஞர் ஆணவக்கொலை: காதலி பரப்பரப்புப் பேட்டி!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

SCROLL FOR NEXT