செய்திகள்

'விக்ரம் வேதா' ஹிந்தி ரீமேக் குறித்து வெளியான சுவாரசியத் தகவல்

விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் தற்போது ஹிந்தியில் உருவாகி வருகிறது. தமிழிலில் இயக்கிய புஷ்கர் - காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கி வருகின்றனர். 

இந்தப் படத்தில் இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சயீஃப் அலிகான் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். மேலும், ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். 27 நாட்களாக அபுதாபியில் நடைபெற்று வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 

இதனையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது லக்னோவில் துவங்கி நடைபெற்று வருகிறது. இங்கு சயீஃப் அலிகான் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தை டி சீரிஸ், ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட், ஃபிரைடே ஃபிலிம்வொர்க்ஸ், ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்தப் படம் அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எச்1பி விசா கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? வைரலாகும் பெண்ணின் பதிவு!

பாரம்பரிய உடையில் தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார்!

வளர்ப்பு நாயின் நகம் பட்டு உடலில் காயம்: ரேபிஸ் தொற்றால் காவல்துறை ஆய்வாளர் உயிரிழப்பு!

தேசிய விருது பெற்ற பார்க்கிங் பட இயக்குநர், தயாரிப்பாளர்!

ஹமாஸ் கடற்படையின் துணைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

SCROLL FOR NEXT