செய்திகள்

விதிமுறையை மீறி பிக் பாஸில் பங்கேற்ற கமல்: விளக்கம் கேட்கும் அரசு

DIN

கரோனா விதிமுறையை மீறி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதாக நடிகர் கமல்ஹாசன் மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்கப்படும் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசனாக நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், அண்மையில் வெளிநாடு சென்று திரும்பிய அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு நவ. 22ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில், வீடு திரும்பி 7 நாள்கள் முடிவடைவதற்குள் கடந்த சனிக்கிழமை நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப் பிடிப்பில் கலந்து கொண்டதாக கமல் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவத்துறை செயலாளரிடம் திங்கள்கிழமை கூறுகையில்,

கரோனா விதிமுறையை மீறியது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் அரசுத் தரப்பில் விளக்கம் கேட்கப்படும் என்றார்.

கரோனா விதிமுறைகளின்படி, நோய்த் தொற்றிலிருந்து வீடு திரும்பிய பிறகு 7 நாள்கள் கட்டாய வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT