செய்திகள்

படப்பிடிப்பில் இருந்து திடீரென காணாமல்போன மீரா மிதுன்: காவல் நிலையத்தில் இயக்குநர் புகார்

படப்பிடிப்புத் தளத்தில் இருந்து நடிகை மீரா மிதுன் காணாமல் போனதாக இயக்குநர் புகார் அளித்துள்ளார். 

DIN

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தவர் மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அதன் பிறகு தனது நடவடிக்கைகளால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். 

இந்த நிலையில் பேயைக் காணோம் என்ற படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது வந்ததது. இந்தப் படத்தை செலவ அன்பரசன் என்பவர் இயக்கி வருகிறார். 

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவந்த நிலையில் திடீரென படப்பிடிப்புத் தளத்தில் இருந்து மீரா மிதுன் காணாமல்போகியுள்ளார். அவருடன் வந்த 6 உதவியாளர்களையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மீரா மிதுன் மீது இயக்குநர் செல்வ அன்பரசன் புகார் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாகன விற்பனை நிலையங்களில் பிரதமர் மோடி படம்? காங்கிரஸ் விமர்சனம்!

புரோ கபடி லீக் 2025: தமிழ் தலைவாஸை விட்டு வெளியேறிய பவன் செஹ்ராவத்!

சத்தீஸ்கரில் 10 நக்சல்கள் சுட்டுக்கொலை! 26 பேர் கைது!

ஆசிய கோப்பை: வங்கதேசத்துக்கு எதிராக ஹாங் காங் பேட்டிங்!

கட்டுமானப் பணி: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT