செய்திகள்

ரஹ்மான் இசையில் தனுஷ் பாடிய 'கலாட்டா கல்யாணம்' விடியோ பாடல் வெளியானது

ரஹ்மான் இசையில் தனுஷ் எழுதி பாடிய கலாட்டா கல்யாணம் விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

DIN


ஹிந்தியில் தனுஷ், அக்ஷய் குமார், சாரா அலிகான் இணைந்து நடித்திருக்கும் படம் அட்ராங்கி ரே. தமிழில் இந்தப் படம் கலாட்டா கல்யாணம் என்ற பெயரில் உருவாகியிருக்கிறது. இந்தப் படம் வருகிற 24 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தில் இருந்து லிட்டில் லிட்டில் எனத் துவங்கும் விடியோ பாடல் வெளியாகியுள்ளது. 

இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார். அவருடன் ஷாலினி ஸ்ரீநிவாஸ் பாடியுள்ளார். இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் பாடியுள்ள பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

முதலமைச்சா் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடக்கம்

கடகத்துக்கு யோகம்.. தினப்பலன்கள்!

சத்தீஸ்கா் மழை வெள்ளம்: திருப்பத்தூரைச் சோ்ந்த ஒரே குடும்பத்தினா் 4 போ் உயிரிழப்பு

வேன் மோதி இளைஞா் மரணம்

SCROLL FOR NEXT