செய்திகள்

வானத்தைப் போல சீரியலில் இருந்து விலகிய தமன்: அடுத்த சின்ராசு யார் தெரியுமா ?

வானத்தைப் போல தொடரில் சின்ராசுவாக நடித்து வரும் தமன் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

'சட்டம் ஒரு இருட்டறை', 'சும்மா நச்சுனு இருக்கு', '6 அத்தியாயம்' போன்ற படங்களில் நடித்தவர் தமன். 'வானத்தைப் போல' என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். 

இந்தத் தொடரில் சின்ராசுவாக தமன் நடித்து வருகிறார். இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தத் தொடரில் இருந்து தமன் குமார் விலகவுள்ளாராம்.

இதுகுறித்த காரணங்கள் தெரியவில்லை. அவருக்குப் பதிலாக பிரபல சின்னத்திரை நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தமன் குமார் சமீபத்தில் கண்மணி பாப்பா என்ற படத்தில் நடித்திருந்தார். 

முன்னதாக இந்தத் தொடரில் இருந்து துளசியாக நடித்த ஸ்வேதா வெளியேறினார்.அவருக்கு பதிலாக பிரபல கன்னட சின்னத்திரை நடிகை மான்யா நடித்து வருகிறார். வானத்தைப் போல தொடரில் முக்கிய கதாப்பாத்திரங்கள் விலகி வருவது ரசிகர்களுக்கு அந்தத் தொடர் மீதான ஆர்வம் குறைய வாய்ப்பிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.26 கோடி

ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்

குடிமனை பட்டா கோரி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம்

SCROLL FOR NEXT