செய்திகள்

ரஜினிகாந்த் - இயக்குநர் நெல்சன் இணைவது உறுதி ?

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் நெல்சன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

அண்ணாத்த படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் புதிய புதிய தகவலாக வெளியாகிறது. ஆனால் அதுவும் எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை. 

சமீபத்தில் ஹிந்தி பட இயக்குநர் பால்கி இயக்கத்தில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது. 

இந்த நிலையில் கடந்த இரு நாட்களாக நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறார்களாம். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.

இயக்குநர் நெல்சன் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். நெல்சனின் தனது படங்களில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதனால் நடிகர் ரஜினிகாந்த்தை முழு நீள நகைச்சுவை படத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.இ.தீவுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி; இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு பிரகாசம்!

இது இந்தியா; வட கொரியா அல்ல! -பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம்

சென்செக்ஸ் 27.46 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 0.06% உயர்வு!

8-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்துக்குத் தடை! ஏன்?

இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் அக்‌ஷர் படேல், சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT