செய்திகள்

'வலிமை' டிரெய்லர் இன்று வெளியாகிறது ! - கை கொடுக்குமா வியாழக்கிழமை சென்டிமென்ட்?

நடிகர் அஜித்தின் வலிமை இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

சமீபத்தில் ஒரு பேட்டியில் வலிமை டிரெய்லர் விரைவில் வெளியாகும் என்று  இயக்குநர் வினோத் தெரிவித்திருந்தார். படம் பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் டிரெய்லர் எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவானது. 

இந்த நிலையில் வலிமை டிரெய்லர் இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நடிகர் அஜித் படங்கள் குறித்த தகவல்கள், டீசர்கள், டிரெய்லர்கள் அனைத்தும் வியாழக்கிழமை தான் வெளியாகும். அந்த வகையில் இந்த டிரெய்லரும் வியாழக்கிழமை வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

யுவன் ஷங்கர் ராஜா இசையில் இரண்டு பாடல்கள் மற்றும் விசில் தீம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. நீரவ் ஷா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT