முகப்பு
செய்திகள்

திருமணம் ஆகிவிட்டதா?: பிக் பாஸ் சனம் ஷெட்டி பதில்

பலர் இக்கேள்வியைக் கேட்கிறார்கள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

நெற்றியில் குங்குமம் வைத்துகொள்வதால் திருமணம் ஆகிவிட்டது என எண்ண வேண்டாம் என பிக் பாஸ் புகழ் சனம் ஷெட்டி கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இம்முறை கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியது. ஆரி வெற்றி பெற்ற இந்நிகழ்ச்சியில் நடிகை சனம் ஷெட்டியும் போட்டியாளராகப் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டபோது, சமூகவலைத்தளங்களில் அவருக்கு ஆதரவாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகவும் பலர் பதிவுகள் எழுதினார்கள். 

இந்நிலையில் சனம் ஷெட்டியின் சமீபத்திய புகைப்படங்களில் அவர் நெற்றியின் மேலே குங்குமம் வைத்திருந்தார். இதனால் அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா என ரசிகர்கள் குழம்பினார்கள். ட்விட்டரில் சனம் ஷெட்டியிடம் ஒருவர் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பதில் அளித்ததாவது:

பலர் இக்கேள்வியைக் கேட்கிறார்கள். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. உங்கள் அனைவருடைய ஆசிர்வாதங்களுடன் ஒரு நாள் திருமணம் செய்துகொள்வேன். திருமணமான பெண்கள் தான் நெற்றியில் குங்குமம் இடவேண்டும் என்கிற கட்டுப்பாடு எங்கள் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →