செய்திகள்

பிரபாஸின் ஆதிபுருஷ்: படப்பிடிப்பு ஆரம்பம்

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. 

DIN

பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. 

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ்.  இதற்கு அடுத்ததாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதன்பிறகு நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது பிரபாஸின் 21-வது படம். பிரபல நட்சத்திரம் தீபிகா படுகோனுடன் இணைந்து முதல்முறையாக நடிக்கவுள்ளார் பிரபாஸ். தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்குப் படம் இது. இப்படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கிறார். கேஜிஎஃப். இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் இணைந்து சலார் என்கிற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இதுதவிர, தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ். ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது. இதன் படப்பிடிப்பு மும்பையில் இன்று முதல் தொடங்கியுள்ளது. 

ஆதிபுருஷ், 2022 ஆகஸ்ட் 11-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

வெற்றி கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புற்றுநோய், அத்தியாவசிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி குறைப்புக்கு ஐஎம்ஏ வரவேற்பு

அனைத்து பயிா்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிா்ணயம் செய்ய வேண்டும்

SCROLL FOR NEXT