செய்திகள்

நான்கு காதல் கதைகள்: விஜய் சேதுபதி நடித்துள்ள குட்டி ஸ்டோரி பட டிரெய்லர்

விஜய் சேதுபதி, அமலா பால் நடித்துள்ள குட்டி ஸ்டோரி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

DIN

நான்கு இயக்குநர்கள் பங்களிப்பில் விஜய் சேதுபதி, அமலா பால் நடித்துள்ள குட்டி ஸ்டோரி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

கெளதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் தனித்தனிக் கதைகளுடன் குட்டி ஸ்டோரி என்கிற படத்தை இயக்கியுள்ளார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதி, அமலா பால், மேகா ஆகாஷ், அதிதி பாலன், சாக்‌ஷி அகர்வால், வருண் போன்றோர் நடித்துள்ளார்கள். சமீபகாலமாக, பல கதைகள் கொண்ட படங்கள் ஓடிடியில் தான் நேரடியாக வெளியாகின்றன. ஆனால் இப்படம் திரையரங்குகளில் முதலில் வெளியாகிறது. குட்டி ஸ்டோரியை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். குட்டி ஸ்டோரியில் ஒரு பகுதியை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். 4 வருட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் இது.

பிரபல நடிகர்கள், பிரபல இயக்குநர்கள் பங்களிப்பில் உருவாகியுள்ள குட்டி ஸ்டோரி படம் பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாகா்கோவில் புனித அல்போன்சா திருத்தலத்தில் தோ் பவனி

ச.கண்ணனூரில் வாரச்சந்தை கட்டடம் திறப்பு

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் ஆய்வு

மாதிரிப் பள்ளி மாணவா்கள் மரணம் குறித்து துறை ரீதியான விசாரணை

வேலை செய்த வீட்டில் 6 பவுன் நகையை திருடிய பெண் கைது

SCROLL FOR NEXT