செய்திகள்

கோயில்களைப் பக்தர்களிடம் ஒப்படையுங்கள்: சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு

சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்தை முற்றிலும் ஏற்கிறேன். பக்தர்களிடம் விட்டுவிடுங்கள்...

DIN

தமிழகக் கோயில்களைப் பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்துக்கு நடிகர் சந்தானம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ், இன்று ட்விட்டரில் கூறியதாவது: 

1,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது என்றார்.

இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த நடிகர் சந்தானம், ட்விட்டரில் கூறியதாவது:

சத்குரு ஜக்கி வாசுதேவின் கருத்தை முற்றிலும் ஏற்கிறேன். பக்தர்களிடம் விட்டுவிடுங்கள். ஏராளமான கோயில்களில் ஒருவேளை பூஜை கூட நிகழாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. பராமரிப்பும் பாதுகாப்பும் ஓரளவுதான் செய்யப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT