செய்திகள்

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி!

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மும்பைகர் என்கிற ஹிந்திப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

DIN

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மும்பைகர் என்கிற ஹிந்திப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார், இயக்குநர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். 19(1)(a) என்கிற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், கடைசி விவசாயி, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களின் வெளியீடு தாமதமாகியுள்ளது. ஷாஹித் கபூருடன் இணைந்து ஹிந்தி இணையத் தொடர் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மணி ரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள நவரசா இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ஹிந்தியிலும் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக், மும்பைகர் என்கிற பெயரில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிறது. இதன் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. விக்ராந்த் மஸ்ஸே, விஜய் சேதுபதி, ரன்வீர் ஷோரே, சஞ்சய் மிஷ்ரா, தன்யா மானிக்தலா, சச்சின் கடேகர் போன்றோர் நடிக்கிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கிய லாரி!

உதகைக்கு விரைந்த பேரிடர் மீட்புக் குழுவினர்!

இணையத் தொடராகும் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம்!

ராமதாஸ் வீட்டில் செல்போன் ஹேக் செய்யப்பட்டதாக காவல்துறையில் புகார்!

வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!

SCROLL FOR NEXT